ராஜயோக தியானம் பதஞ்சலி
மகரிஷி அருளிய தியானம்
LIKE | COMMENT | SHARE | FORWARD | SUBSCRIBE | BELL
தியானம் என்பது அலைபாயும் நம் மனதை ஒருநிலை படுத்தும் நிலையே தியானமாகும் .தியானம் மனிதனை மலரைபோல் மென்மையாகவும் சிங்கத்தை போல் கம்பீரமாகவும் சூரியனை போல் பிரகாசமாகவும் வைத்திருக்கும்.
தியானம் பயிற்சி நேரில், தபாலில், ஆன்லைன் மற்றும்
whatsapp மூலமாகவும் அளிக்கப்படும். kaizala, imo,
& whatsapp: call : 9442697902
தியானம்
செய்வதனால் மனிதனுக்கு பல்வேறு நன்மைகள் உள்ளது. ஒருவர் தினமும் பதினைந்து நிமிடங்களாவது தியானம் செய்வது நல்லது. காலையிலோ, மாலையிலோ எப்போது வேண்டுமானாலும் தியானம் செய்யலாம்
ராஜயோக தியானம் பதஞ்சலி மகரிஷி அருளிய தியானம்
மருத்துவமனைக்கு
செல்லும் தேவையை குறைக்கும்.
மருந்து
மாத்திரைகளிடம் இருந்து உங்களை விடுவிக்கும்.
மாணவர்கள்
பாடங்கள் கவனிக்கும் திறனை அதிகர்க்கும்.
தற்காப்பை
உருவாக்கும்.
வாழ்க்கையின்
மேடு,பள்ளங்களை பக்குவமாக கையாள மனதை தயார்படுத்தும்.
வயதிற்கேற்ற
மன முதிர்வை உருவாக்கும்.
இசையில்
நாட்டமுள்ளவர்களுக்கு
கலைத்திறனை அதிகரிக்கும்.
ரத்த
சுத்திகரிப்பை அதிகரிக்கும்.
நீங்கள்
மறந்துவிட்ட சில முக்கிய நிகழ்வுகளை ஞாபகபடுத்தும்.
உடலுக்கு
தீங்கு விளைவிக்கும் வைரஸ்களை நீக்கும்.
உடலில்
உள்ள கொழுப்பு சக்தியை குறைக்க உதவும்.
இதய
நோய்களை கட்டுபடுத்தும்.
உடலில்
உள்ள ஹார்மோன்களின் செயல்பாட்டை சீர்படுத்தும்.
வியர்வை
அதிகம் வெளியேறுவதை சீர்படுத்தும்.
தலைவலி
பிரச்சினை உள்ளவர்கள் அதற்க்கு தீர்வு காணலாம்.
ஆஸ்மா
நோயிலிருந்து பூரண குணமடையலாம்.
தீய
பழக்கங்களை ஒழிக்கும்.
நமது
உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
கற்பனை
திறன் அதிகரிக்கும்.
மற்றவர்கள்
கூறும் அறிவுரையை தட்டி கழிக்காமல் பொறுமையோடு கேட்டு அதன்படி நடக்கும் மனநிலையை உருவாக்கும்.
உங்கள்
வாழ்வில் மிகப்பெரிய மாற்றம் உண்டாகும்.
உங்களின்
அறிவுத்திறன் வளரும் விகிதம் அதிகமாகும்.
பெரியவர்களை
மதித்து நடக்கும் உயரிய மனம் உருவாகும்.
உங்களுக்கு
இருக்கும் கடமைகளை உணர செய்யும்.
கடமைகளில்
வெற்றியும் பெறச்செய்யும்.
மனம் பற்றிய ஒரு சுயப் புரிதல் என்பது எந்த ஒரு சிந்திக்கும் மனிதனுக்கும் அவசியமானதாகும்
அகம்
அல்லது மனம் என்பதை அறிவது என்பது எல்லா அறிவுச் செயல்பாடுகளுக்கும் அடிப்படையாக உள்ள விஷயமாகும். நீங்கள் என்ற அறிவுத்துறையை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். மொழியியல் ,சமூகவியல் , உயிரியல் , கணிதம் -- எதுவானாலும் அது மனம் என்பதற்கு ஒரு விளக்கம் அளிக்க முற்படுவதனைக் காணலாம். காரணம் மனம் என்பதை வகுத்த பிறகே அது தன் பிற அலகுகளை வகுக்க முடியும். மேலும் அது தன் அறிதல்களை வகுக்க வகுக்க அவற்றை அறிகிற மனமும் வகுக்கப்பட்டபடியே போகிறது. உதாரணமாக மொழியியல் மொழி என்றால் என்ன என்று வகுத்து மொழியின் பல்வேறு செயல்பாடுகளை வகுக்கும்போது வகுக்கப்படுவது மொழிமூலம் செயல்படும் மனமும்தான் இல்லையா ?
ஆகவே
மனம் பற்றிய ஒரு சுயப் புரிதல் என்பது எந்த ஒரு சிந்திக்கும் மனிதனுக்கும் அவசியமானதாகும். நான் எதை அறிகிறேன் என்பது நான் எப்படி அறிகிறேன் என்பதுடன் சம்பந்தப்பட்டுள்ளது ,அதன் மூலமே தீர்மானிக்கப்படுகிறது . அதற்கு மிக எளிய வழி தன் மனதை கூர்ந்து கவனிப்பதே .கவனிக்க ஆரம்பித்து விட்டார்கள் என்றால் தியானம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள் என்றே பொருள் . அப்படியானால் அந்த தியானத்தைமேலும் துல்லியமாக, மேலும் ஆழமாக, செய்வது எப்படி என்று அறிவது அவசியம் . பதஞ்சலி யோக சூத்திரம் அதற்குரிய ஒரு வழிமுறையாகும். நமது இந்நூலில் மனதை அறிய அந்நூலை எப்படித் துணை கொள்வது என்பது மட்டுமே பேசப்பட்டுள்ளது
பதஞ்சலி
முனிவரும் யோக சூத்திரங்களும்
பதஞ்சலி
முனிவர் கி.மு. நாலாம்
நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்பது பொதுவான ஊகம். கி மு இரண்டாம்
நூற்றாண்டில் என்று சொல்பவர்களும் உண்டு. யோக சூத்திரங்கள் 1]சமாதி , 2]சாதனை, 3]விபூதி, 4]கைவல்யம் என்று நான்கு பாதங்களிலாக 195 சூத்திரங்கள் கொண்டது.
யோக
சூத்திரங்களின் முக்கியத்துவம் என்னவென்றால் பலகாலமாகவே ஒரு வழிமுறையாக கடைப்பிடிக்கப்பட்ட யோக முறைகளை வகுத்து தொகுத்து அளித்தமைதான் . அதைவிட முக்கியமானது ஒன்று உண்டு. யோக முறைகள் அவருக்கு முன்பாக ஏறத்தாழ எல்லா கருத்தியல்தரப்புகளாலும் பலவிதமாக கடைப்பிடிக்கப்பட்டன. பதஞ்சலியே அவற்றைத் தொகுத்து பொதுவான அம்சங்களை மட்டும் கொண்டு யோகம் என்ற தனித்த அமைப்பை உருவாக்கினார் . அம்மரபு எந்த மதத்துக்கும் சொந்தமில்லாமல் ,அதே சமயம் அனைத்து மதத்துக்கும் பொதுவானதாக இருக்கும்படி அமைத்தது அவரது சாதனையே .ஒற்றை வரியில் சொல்லப்போனால் 'மதசார்பற்ற புறவயமான நிர்ணயங்களாக ' யோக சூத்திரங்களை அமைத்ததே பதஞ்சலி முனிவரின் பங்களிப்பாகும்.
பதஞ்சலி
யோகத்துக்கு பல உரைகள் பண்டைக்காலம்
முதல் உள்ளன. வியாச பாஷ்யமே முதல் உரை. அதுவே அடிப்படையானதுமாகும். இவ்வுரை சாங்கிய பிரவசன பாஷ்யம் எனப்படுகிறது. சாங்கிய சிந்தனையின் நீட்சியாக வியாசன் யோகத்தைக் காண்கிறார் . வாசஸ்பதி மிஸ்ரரின் 'விசாராதி ' என்ற உரையும் புகழ் பெற்றது .
No comments:
Post a Comment