மூல
நோய் குணமாக மூலிகை மருத்துவம்
மூல
நோய் குணமாக மூலிகை மருத்துவம், பயன்கள்
மூல
நோய் குணமாக மூலிகை
மஞ்சாள் துள் விளக்குணெண்னைய் முருங்கிலை முள்ளாங்கி இலை எருங்கன் பால் கருணைக்கிழங்கு பொடி தேன் பசும்பால் மோர் வெல்லம் சக்காரை முள்ளாங்கி சாறு மோர் பகற்காய் இலை அருகம்புல் நீரில் வெங்காய்யம் மோர் பொன்னகண்ணி சமுலம் கடுகாய் துள் தீப்பிலி பனகற்கண்டு
வெண்ணெய் நெல்லிகாய் வற்றல் பொடி மோர் வெங்காய்யம்
மோர் மிளகு துளசி இலை
மூல
நோய் குணமாக மூலிகை குணங்கள்
மூல
நோய் குணமாக மூலிகை , மருத்துவம் குணங்கள்
பைல்ஸ் பிரச்சனை இருந்தால், அதனை உடனே கவனிக்க வேண்டும். இல்லாவிட்டால், அவை முற்றி நாள்பட்ட இரத்த கசிவு, திசுக்களின் இறப்பு மற்றும் ஆசன வாய் மற்றும் குடல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது. பைல்ஸ் பிரச்சனைக்கு ஒருசில இயற்கை வைத்தியத்தின் மூலம் சிகிச்சை அளிக்கலாம்.
ஐஸ்
பைல்ஸ் பிரச்சனைக்கு சிறந்த சிகிச்சை எனில் அது ஐஸ் தான். ஐஸ் கொண்டு அவ்விடத்தை ஒத்தனம் கொடுத்தால், இரத்த நாளங்கள் விரிவடைந்து, வீக்கம் குறைந்து, உடனடி நிவாரணம் கிடைக்கும். அதற்கு ஐஸ் கட்டிகளை துணியில் போட்டு கட்டி, அதனைக் கொண்டு 10 நிமிடம் வலியுள்ள இடத்தில் ஒத்தடம் கொடுக்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் செய்யலாம்.
கற்றாழை
கற்றாழை ஜெல்லை ஆசனவாயில் தடவி மெதுவாக மசாஜ் செய்து வந்தால், எரிச்சல் மற்றும் வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
மூல
நோய் குணமாக மூலிகை மருத்துவ பயன்கள்
எலுமிச்சை சாறு
எலுமிச்சை சாறு கூட பைல்ஸ் சிகிச்சைக்கு உதவும். அதற்கு எலுமிச்சை சாற்றில் காட்டனை நனைத்து, அதனை மெதுவாக ஆசனவாயில் தடவ வேண்டும். ஆரம்பத்தில் எரிச்சல் இருந்தாலும், கடுமையான வலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும். இல்லாவிட்டால், சூடான பாலில் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு மூன்று மணிநேரத்திற்கு ஒருமுறை தடவ வேண்டும்.
மூல
நோய் குணமாக மூலிகை , மருத்துவம் நன்மைகள்
பாதாம் எணணெய்
பாதாம் எண்ணெய்க்கு பாதிக்கப்பட்ட திசுக்களை சரிசெய்யும் குணம் உள்ளது. ஆகவே சிறிது காட்டனை எடுத்து, அதனை பாதாம் எண்ணெயில் நனைத்து, பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி வர, வலி, அரிப்பு மற்றும் எரிச்சல் போன்றவற்றில் இருந்து நிவாரணம் கிடைக்கும். இந்த செயலை ஒரு நாளைக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் செய்யலாம்.
மூல நோய் குணமாக மூலிகை நன்மைகள்
தானியங்கள்
பைல்ஸ் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள், தானியங்களை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். ஏனெனில் அதில் நார்ச்சத்துக்கள் வளமாக நிறைந்துள்ளது. ஆகவே இவற்றை உட்கொண்டு வந்தால், பைல்ஸ் பிரச்சனையில் இருந்து நிவாரணம் கிடைப்பதோடு, இரத்த கசிவும் குறையும். மேலும் தானியங்களில் உள்ள நார்ச்சத்து மலத்தை இலகுவாக்கி, எளிதில் வெளியேற்றுவதால், கடுமையான வலியில் இருந்து தப்பிக்கலாம். எனவே ஓட்ஸ், பார்லி, கைக்குத்தல் அரிசி, திணை போன்றவற்றை அவ்வப்போது உணவில் சேர்த்து வாருங்கள்.
ஆப்பிள் சீடர் வினிகர்
ஆப்பிள் சீடர் வினிகர் இரத்த நாளங்களில் உள்ள வீக்கத்தை குறைத்து, அரிப்பு மற்றும் எரிச்சலில் இருந்து நிவாரணம் தரும். அதற்கு ஆப்பிள் சீடர் வினிகரை காட்டனில் நனைத்து, பாதிக்கப்பட்ட இடத்தில் ஒரு நாளைக்கு பலமுறை தடவி வர வேண்டும். இல்லாவிட்டால், ஒரு டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை ஒரு டம்ளர் நீரில் கலந்து, தேன் சேர்த்து தினமும் இரண்டு முறை குடித்து வர, நல்ல பலன் கிடைக்கும்.
No comments:
Post a Comment