Thursday, 22 March 2018

மலச்சிக்கல் தீர மூலிகை


மலச்சிக்கல் தீர   மூலிகை மருத்துவம்


மலச்சிக்கல் தீர   மூலிகை மருத்துவம், பயன்கள்

மலச்சிக்கல் வராமல் தடுக்க எளிய டிப்ஸ்


ஒரு நாளைக்கு இரண்டு மூன்று லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். சிறுநீரக நோயாளிகள் மற்றும் இதய நோயாளிகள் மருத்துவர் பரிந்துரைப்படி, தண்ணீர் அருந்த வேண்டும்.
தினமும் நார்ச்சத்து மிகுந்த உணவுகளைச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
அரை மணி நேர நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி தினமும் செய்ய வேண்டும்.



மலச்சிக்கல் தீர   மூலிகை  குணங்கள்  

பழங்கள் நிறைய சாப்பிட வேண்டும். குறிப்பாக, மாதுளம்பழம், கொய்யாப்பழம், பப்பாளி, பேரீச்சை, ஆரஞ்சு, அத்தி, தர்பூசணி, மாம்பழம் இவற்றை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும். சர்க்கரை நோயாளிகள், உயர் ரத்த அழுத்தம், சிறுநீரகக் கோளாறு உள்ளிட்ட பிரச்னை உள்ளவர்கள், டாக்டர்களின் அறிவுரை பெற்று, பழங்கள், காய்கறிகளைச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.



மலச்சிக்கல் தீர   மூலிகை  , மருத்துவம் குணங்கள்



மலச்சிக்கல் தீர   மூலிகை மருத்துவ   பயன்கள்

காய்கறிகளில் முட்டைகோஸ், தக்காளி, கேரட், வெள்ளரிக்காய், புடலங்காய், வாழைத்தண்டு, காலிஃப்ளவர் மற்றும் கீரை வகைகளையும், தானியங்களில் கேழ்வரகு, கொள்ளு, கோதுமை, வரகு மற்றும் கம்பையும் சமையலில் சேர்த்துகொள்ள வேண்டும்.


வாரம்  இரண்டு மூன்று  முறை வெந்நீரில் எலுமிச்சை மற்றும் தேன் கலந்து குடிக்கலாம்.


மலச்சிக்கல் தீர   மூலிகை  , மருத்துவம் நன்மைகள்  


ஆமணக்கு எண்ணெய், ஆலிவ் எண்ணெய், பாதாம் எண்ணெய் போன்றவற்றை சமையலுக்குப் பயன்படுத்தலாம்.

செப்புப் பாத்திரத்தில் காலையிலும் மாலையிலும் தண்ணீர் அருந்துவது நல்லது.

யோகாசனம் செய்வது சீராக மலம் வெளியேற உதவும்.


மருத்துவரின் ஆலோசனையுடன் மலமிளக்கிகளை (Laxatives) எடுத்துக்கொள்ளலாம்.

மலச்சிக்கல் தீர   மூலிகை நன்மைகள்   

எல்லா பழங்களிலும் நார்ச்சத்துக்கள் உள்ளன. பழங்களை அப்படியே சாப்பிட்டால், நார்ச்சத்து உடலுக்குள் சேரும். ஜூஸாகத் தயாரிக்கும்போது, நார்ச்சத்து சிதைந்துவிடும். வெறும் வைட்டமின், தாதுஉப்பு உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் மட்டுமே கிடைக்கும்.

பழங்கள், காய்கறிகளில் உள்சதையைவிட தோலில்தான் அதிக அளவு நார்ச்சத்து இருக்கிறது. ஆர்கானிக் காய்கறியாக இருந்தால், தோலைச் சீவாமல் பயன்படுத்துவது நல்லது.

வாழைப்பழத் தோலில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. தோலை நாம் தவிர்த்தாலும், மெல்லிய இழை போன்ற தோலில் ஒட்டியிருக்கும் படிமத்தை எடுத்துச் சாப்பிட்டு வர, நார்ச்சத்து அதிக அளவில் கிடைக்கும்.

பருப்பு, பயறு, நட்ஸ் ஆகியவற்றிலும் நார்ச்சத்து இருக்கிறது.

ஹெல்த் மிக்ஸ் பவுடர், சத்து மாவுப் பொடி, கிழங்கு வகைகளில் குறைவான நார்ச்சத்து இருக்கிறது.

கைக்குத்தல் அரிசி, சிறுதானியம், கேழ்வரகு, கம்பு போன்ற சிறுதானியங்களில் நார்ச்சத்து நிறைவாக உள்ளது. அரிசியை பாலீஷ் செய்யும்போது நார்ச்சத்தும் சேர்ந்து வெளியேற்றப்படுகிறது.

No comments:

Post a Comment