Wednesday, 14 March 2018

உடல், மன ஆரோக்கியம், ஆண்மை அதிகரிக்க மூலிகை


ஆரோக்கியம்,  ஆண்மை  மூலிகை மருத்துவம்,


ஆரோக்கியம்,  ஆண்மை  மூலிகை மருத்துவம், பயன்கள்,


ஆண்மைக் குறைபாடுகள், பெண்களின் குறைபாடுகள், குழந்தையின்மை இவற்றுக்கான பலனளிக்கும் அற்புத சிகிச்சைகள் ஆயுர்வேதத்தில் உள்ளன. (பார்க்க – வாஜீகர்ணம்). பக்க விளைவில்லாமல் இயற்கையோடு ஒன்றிய சிகிச்சையை நீங்கள் பெறலாம். ஆயுர்வேதம் பயன்படுத்தும் சில மூலிகைகள்.

ஆரோக்கியம்,  ஆண்மை  மூலிகை  குணங்கள் ,
 
1. விந்துவின் எண்ணிக்கையையும், தரத்தையும் உயர்த்த:- இந்தப்பிரிவில் உள்ள மூலிகைகள் விந்தணுக்கள் இறப்பதை குறைத்து, விந்து விருத்தியாக உதவுகின்றன. விந்தணுக்களின் நடமாட்டத்தை அதிகரிக்கின்றன.

உதாரணம்:- வெள்ளை முஸ்லி (White Musli).
2. விறைப்புத்தன்மையை உண்டாக்க:- அஸ்வகந்தா, முஸ்லி போன்றவை
3. விந்து முந்துதல்:- இந்த மூலிகைகள் விந்து சீக்கிரம் வெளியேறுவதை தடுத்து, உடலுறவின் இன்பத்தை நீடிக்கின்றன. ஜாதிக்காய், அக்கிரகாரம் (AnacyclusPyrethrum) போன்ற மூலிகைகள் உபயோகப்படுத்தப்படுகின்றன.
4. அதீத செக்ஸ் ஆசையை கட்டுப்படுத்த:- கர்ப்பூரம், சர்பகந்தா போன்றவை நரம்புகளை சமனப்படுத்தும். ஆசையை குறைக்கும்.


ஆரோக்கியம்,  ஆண்மை  மூலிகை  , மருத்துவம் குணங்கள்



ஆரோக்கியம்,  ஆண்மை  மூலிகை மருத்துவ   பயன்கள்,


1. அமுக்கிராக்கிழங்கு எனும் அஸ்வகந்தா:- பழங்காலத்திலிருந்தே அஸ்வகந்தா (Withania Somnifera) செக்ஸ் குறைபாடுகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. வத்ஸ்யானரின் “காம சூத்திரத்தில் குறிப்பிட்ட மூலிகை. அஸ்வகந்தா இருவழியில் செயல்படுகிறது. மனதை அமைதியாக, சாந்தமாக வைக்க உதவுகிறது. பாலுணர்வு ஆரோக்கியமாக இருக்க உடலுக்கு வலிமை ஊட்டுகிறது. இதில் உள்ள நைட்ரிக் ஆக்சைட், ரத்த நாளங்களை விரியச் செய்து அதிக ரத்தம் பாய உதவுகிறது. ஆயுர்வேத சிறப்பு சிகிச்சைகளான “ரசாயனம், “வாஜீகர்ணம் இவற்றில், அஸ்வகந்தா உடல், மன ஆரோக்கியத்தை அதிகரிக்க உபயோகமாகிறது. தவிர உடலின் நோய் தடுப்பு சக்தியையும் விருத்தி செய்கிறது. செக்ஸ் குறைபாடுகளுக்கு தரப்படும் ஆயுர்வேத மருந்துகளில் அஸ்வகந்தா ஒரு முக்கிய மூலிகை. ஆண் ஹார்மோனான “டெஸ்டோஸ்டிரோன்போன்ற செயல்பாடுகளுடையது. சுற்றுப்புற சூழலின் மாசுகளிலிருந்து பாதுகாத்து இளமை தொடர உதவுகிறது. அஸ்வகந்தா, இந்திய “கின்ஸெங் (Ginseng) எனப்படுகிறது.

ஆரோக்கியம்,  ஆண்மை  மூலிகை  , மருத்துவம் நன்மைகள்  


2. பூனைக்காலி – (Mucuna Pruriens-காபிக்காட்சு) விந்துவின் தரம், உடலுறவுக்கான வலிமை, உடலுறவில் இச்சை இவையெல்லாம் அதிகரிக்க செய்யும். நரம்புக்கோளாறுகளை குறைக்கும். ஆண்களுக்கு மட்டுமின்றி, பெண்களின் பாலியல் பிரச்சனைகளையும் தீர்க்கும் மூலிகை. ஆண்களின் விறைப்புத்தன்மை இழப்பை மீட்டுத்தரும்.
3. சதவாரி – தண்ணீர்விட்டான் கிழங்கு (Asparagus Racemosus) வடமொழியில் சதவாரி என்றால் ’100 கணவர்கள் உடையவள் என்று பொருள். பெண்களுக்கேற்ற ஸ்பெஷல் ‘டானிக் மலட்டுத்தன்மை மட்டுப்படித்தி உடலுறவுக்கேற்ற ஆற்றலை தரும். பெண்களுக்கே உரிய மாதவிடாய் கோளாறுகளுக்கு அருமருந்து. பூப்பெய்திய பருவத்திலிருந்து மெனோபாஸ் வரை உபயோகிக்கலாம். ரத்த விருத்தியை உண்டாக்கும். சாதாரணமாக பூனை காலியுடன் சேர்ந்து கொடுக்க, விந்துவின் தரம் உயரும்.
4. கற்றாழை – (Aloevera) தமிழில் கற்றாழையின் இன்னொரு பெயர் ‘குமரி. குமரி போன்ற இளமையை கொடுக்கும். தினமும் ஒரு மேஜைக்கரண்டி கற்றாழை சாறு குடித்து வந்தால் இளமையாக இருக்கலாம்.

5. நெருஞ்சில் – (கோக்சுரா – Tribulus Terrestris) இது உடலுறவுக்கு ஆவலை அதிகரிக்கும். ஆண் ஹார்மோனை அதிகரிப்பதால், சீனா, இந்திய வைத்திய முறைகளில் முக்கிய மருந்து. பெண்களில் ப்ரோலாக்டின் (Prolactin) லெவலை குறைக்கிறது. ப்ரோலேக்டின் அளவு அதிகமானால் பெண்களின் உடலுறவு ஆசை குறையும். பெண்களின் மலட்டுத்தன்மைக்கு சிகிச்சை மருந்து. 

ஆரோக்கியம்,  ஆண்மை  மூலிகை நன்மைகள் 


6. அதிமதுரம் – (Licorice root) மூலிகை கலவைகளில் சரிசமநிலையை உண்டாக்கும். அதிமதுரம் அட்ரீனலின் சுரப்பியை ஊக்குவிக்கும். பாலியல் செயல்பாடுகளுக்கு அட்ரீனலின் ஒரு முக்கியமான சுரப்பி. நேரடியாக செக்ஸ் உணர்வுகளை ‘கன்ட்ரோல் செய்கிறது. அட்ரீனலின் குறைந்தால் ஆசையும் குறையும். சக்தியில்லாமல் போகும். உடலுறவு ஆர்வமும் குறையும்.
7. சிலாஜித் – (Asphalt) இமயமலை, விந்திய மலை, நேபால் இவற்றில் பாறையிலிருந்து வெளிவரும் தார் போன்ற ஒரு பொருள். மண்ணில் மக்கிப்போன தாவரங்களின் மூலம் கூட சிலாஜித் உண்டாகியிருக்கலாம். நாலு வகை சிலாஜித் குறிப்பிடப்படுகிறது. தங்க சிலாஜித் (சிகப்பு நிறம்), வெள்ளி சிலாஜித் (வெள்ளை நிறம்), செம்பு சிலாஜித் (நீல நிறம்), இரும்பு சிலாஜித் (பழுப்பு நிறம்) அதிமாக கிடைப்பது இரும்பு சிலாஜித்தான். மற்றவை அபூர்வம். “குணம் காணும் வியாதிகளில், சிலாஜித் குணப்படுத்த முடியாத வியாதி எதுவுமில்லை என்கிறார் சரகர். செக்ஸ் குறைபாடுகளில் சிலாஜித், அஸ்வகந்தாவுடன் சேர்த்து கொடுக்கப்படுகிறது. பெண்களின் மலட்டுத்தன்மைக்கு சிலாஜித் சிறந்த மருந்து.
8. வெள்ளை முஸ்லி – (சஃபேத் முஸ்லி, Chlorophytum Arundinaceum / Borivilianum) – நூற்றுக்கணக்கான ஆயுர்வேத, யுனானி, அலோபதி, ஹோமியோபதி மருந்துகளில் சேர்க்கப்படும் மூலிகை வெள்ளை முஸ்லி. ஆயுர்வேத “ச்யவன பிராசம் – இளமையை தக்க வைக்கும் மருந்தில் வெண் முஸ்லி ஒரு முக்கிய பகுதிப் பொருள். பிரபலமான “வயாகரா வுக்கு மாற்று மருந்தாக முஸ்லி சொல்லப்படுகிறது. ஆண்களின் குறைபாடுகளில் முக்கியமான பிறவி உறுப்பு, விறைப்பு இல்லாமல் போவதை குணப்படுத்தும்.
9. சோப்சினி – (Chopachini – Smilax China) – இந்த மூலிகையை சைனா தேசத்தில் அதிகம் பயிரிடுவதால் இந்த பெயர் வந்தது. இது “சுய இன்பம் காணும் பழக்கத்தை குறைக்க உதவும்.

10. திப்பிலி – (Piper longum) – இது ஆணுறுப்பின் விறைப்புத் தன்மையை பலப்படுத்தும். சரகர், நீடித்த விறைப்புத் தன்மைக்கு சொல்லும் திப்பிலி மருந்து – 30 திப்பிலியின் உலர்ந்த பழங்களை பொடித்துக் கொள்ளவும். இதை 45 மி.லி. பசு நெய், 45 மி.லி. எள் எண்ணை கலவையில் வறுத்துக் கொள்ளவும். இதை பாத்திரத்திலிருந்து எடுக்க வேண்டாம். அதே பாத்திரத்தில் 45 கிராம் சர்க்கரை, 45 கிராம் தேனும் சேர்க்கவும். இதே பாத்திரத்தில், நேரடியாக, ஒரு ஆரோக்கியமான பசுவிலிருந்து பாலை கறந்து கொள்ளவும். இதை எவ்வளவு முடியுமோ அவ்வளவு குடிக்கவும். பிறகு பசிக்கும் போது பிரத்யேக அரிசி, நெய் கலந்த சோறை உட்கொள்ளலாம். 

1 comment:

  1. உடல், மன ஆரோக்கியம், ஆண்மை அதிகரிக்க மூலிகை

    ReplyDelete