Monday, 9 April 2018

நரம்பு தளர்வு, மனச்சோர்வை அகற்றும் அமுக்கரா

அமுக்கரா  மூலிகை மருத்துவம்


அமுக்கரா  மூலிகை மருத்துவம், பயன்கள்

நரம்பு தளர்வு, மனச்சோர்வை அகற்றும் அமுக்கரா
சிறுநீர் பெருக்கும்; உடல் வெப்பத்தைக் கட்டுப்படுத்தும்; மலச்சிக்கலைப் போக்கும்; வீக்கத்தைக் குறைக்கும்; வாதநோயைக் கட்டுப்படுத்தும்; உடலைத் தோற்றும்; ஆண்மையை அதிகமாக்கும். நரம்புத் தளர்ச்சி, உடல் அசதி, மூட்டுவலி ஆகியவை தீர உடல் பலம் அதிகரிக்க, பிரசவ காலத்தில் ஏற்படும் உடல் அசதி நீங்க

அமுக்கரா  மூலிகை  குணங்கள்

அமுக்கரா முழுத்தாவரமும் வெப்பத் தன்மையும், காரச் சுவையும், கொண்டது. இவை சிறுநீர் பெருக்கும்; உடல் வெப்பத்தைக் கட்டுப்படுத்தும்; மலச்சிக்கலைப் போக்கும்; வீக்கத்தைக் குறைக்கும்; வாதநோயைக் கட்டுப்படுத்தும்; உடலைத் தோற்றும்; ஆண்மையை அதிகமாக்கும்.
அமுக்கரா வேரின் நோய் எதிர்ப்புத் திறன், நுண்ணுயிர்களைக் கட்டுப்படுத்தும் தன்மை போன்றவை தற்போதைய உயர்நிலை ஆய்வுகள் மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளன
  
அமுக்கரா  மூலிகை  , மருத்துவம் குணங்கள்


அமுக்கரா  மூலிகை மருத்துவ   பயன்கள்

உடல் அசதி, மூட்டுவலி ஆகியவை தீர நன்றாகக் காய்ந்த அமுக்கரா கிழங்கை இடித்துத்தூள் செய்து கொள்ள வேண்டும். அத்துடன், சம அளவு சர்க்கரை சேர்த்து, காற்றுப்புகாத பாத்திரத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். தினமும், காலை, மாலை வேளைகளில் ஒரு தேக்கரண்டி அளவு, 200 மி.லி. காய்ச்சிய பாலுடன் கலந்து கொடுக்க வேண்டும் 4 வாரங்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.
அமுக்கரா  மூலிகை  , மருத்துவம் நன்மைகள்

காய்ந்த அமுக்கரா கிழங்கைச் சம அளவு சுக்குடன் சேர்த்து, வெந்நீர் விட்டு அரத்து மேல் பூச்சாகப் பூச வீக்கம் குறையும். 

அமுக்கரா  மூலிகை நன்மைகள் 

உடல் பலம் அதிகரிக்க பச்சையான அமுக்கரா கிழங்குகளிலிருந்து இரசம் தயார் செய்ய வேண்டும். இத்துடன் பனங்கற்கண்டு, தேன் மற்றும் திப்பிலி சேர்க்க வேண்டும். 21 நாட்கள் வரை தினம் இருவேளை அரை டம்ளர் அளவு இரசத்தைப் பருக வேண்டும்.
பிரசவ காலத்தில் ஏற்படும் உடல் அசதி நீங்க 2 தேக்கரண்டி கிழங்குத் தூளை இளஞ்சூடான பாலில் கலந்து, தினமும் இரண்டு வேளை பனங்கற்கண்டு சேர்த்து உட்கொள்ள வேண்டும். 

No comments:

Post a Comment