முலாம்பழம் மூலிகை மருத்துவம்
முலாம்பழம்
மூலிகை மருத்துவம், பயன்கள்
முலாம்பழம்
- மருத்துவ குணங்கள்
உடல்
உஷ்ணத்தை போக்க கூடியதும், சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சலை போக்கவல்லதும், வயிற்றுப்போக்கை குணப்படுத்த கூடியதுமான முலாம்பழம் நல்ல மணம், சுவை உடையது. மிகுந்த சத்துக்களை உள்ளடக்கியது. இதில் வைட்டமின் ஏ, இரும்புச் சத்து,
பொட்டாசியம் சத்து அதிகமாக உள்ளது. மினரல் அதிகம் இருக்கிறது.
முலாம்பழம் மூலிகை குணங்கள்
நோய்களை
தடுக்க கூடியது மட்டுமின்றி உடலுக்கு புத்துணர்வை அளிக்கவல்லது. கோடைக் காலத்தில் முலாம் பழம் அதிகளவில் கிடைக்கும்
இதை
கொண்டு நீர்வேட்கையை தணிக்கும் பானம் தயாரிக்கலாம். முலாம் பழத்தின் சதை பகுதியை அரைத்து பனங்கற்கண்டு சேர்த்து கலந்து குடிக்கலாம்.
முலாம்பழம்
மூலிகை , மருத்துவம் குணங்கள்
முலாம்பழம் மூலிகை மருத்துவ பயன்கள்
குழந்தைகள்
விரும்பி சாப்பிடுவார்கள். முலாம் பழத்தை பயன்படுத்தி மில்க் ஷேக் தயாரிக்கலாம். விதைகள் நீக்கிய முலாம் பழத்துடன், சிறிது பனங்கற்கண்டு, காய்ச்சிய பால் சேர்த்து அரைத்து சிறிதளவு குங்குமப்பூ சேர்க்கவும். இந்த மில்க் ஷேக்கை காலை
உணவின்போது எடுக்கலாம்.
இது,
வெயில் காலத்தில் ஏற்படும் சோர்வை போக்குகிறது. சிறுநீர் எரிச்சலை தடுக்கும். மிகுந்த சத்தூட்டமான உணவாகிறது. கர்ப்பிணி
பெண்கள் இதை எடுத்துக்கொண்டால் குழந்தையின் ஆரோக்கியம் மேம்படும். குழந்தையின் முதுகெலும்பு, மூளை வளர்ச்சி நன்றாக இருக்கும்.
முலாம்பழம் மூலிகை , மருத்துவம் நன்மைகள்
முலாம்பழம் மூலிகை நன்மைகள்
முலாம்
பழத்தை உண்டு வர மூல நோய்
குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். சிறுநீர்தாரை எரிச்சல், நீர்க்கடுப்பு நீங்கும்.
அஜீரணத்தை
அகற்றி பசி ருசியை ஏற்படுத்தும்.
இதில்
வைட்டமின்கள் "ஏ', "பி', "சி' தாதுப் பொருள்கள் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும். கல்லீரல் கோளாறுகளைப் போக்கும் தன்மை இதற்கு உண்டு.
பித்தத்தை
மொத்தமாக அகற்றும். சரும நோய்க்கு எளிய இயற்கை மருந்து.
இப்பழச்
சதையுடன் தேன் கலந்து உண்டு வர, வாய்ப்புண், தொண்டைப் புண் குணமாகும். கண் பார்வையை அதிகரிக்கும் சக்தி இதற்கு உண்டு.
உடலுக்கு
வலுவைத் தரும். இதன் பழத்தின் சதையைப் பயன்படுத்தி சர்பத் செய்து குடித்து வர உடலுக்கு குளிர்ச்சி
ஏற்படும்.
கோடை
நோய்கள் வராமல் காக்கும்.
No comments:
Post a Comment